கடலுார் துறைமுகம் மேம்படுத்த விரைவில் இறுதி கட்ட ஒப்பந்தம்: உள்ளூர் இளைஞர்கள் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு
கடலுார் கடலுார் துறைமுகம் மேம்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதில் உள்ளூர் இளைஞர்கள் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் ,தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனார் (ம) பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கடலுார் துறைமுகம் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி துறைமுகமாகும். ஆசியாவில் உள்ள பழைமையான துறைமுகங்களில், கடலுார் துறைமுகமும் ஒன்று. சென்னையை அடுத்த எண்ணுார், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துைறமுகம் ஆகியவை ஏற்றுமதி, இறக்குமதியில் தடம் பதித்த பின்னர், கடலுார் துறைமுகம் பொலிவிழந்தது.
இத் துறைமுகம் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இத்துறைமுகத்தில் இருந்து எல்லா காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக கருதப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேப்போல கோதுமை, யூரியா இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பொருட்கள் ரயில்வே வேகனில் ஏற்றி பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
2000க்கு பின்னர் கடலுார் துறைமுகத்திற்கு கப்பல் வருவது படிப்படியாக குறைந்தது. அதன் பின்னர் ரயில்வே பாதையும் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் துறைமுகத்திற்கு கப்பல் வருகை தரவில்லை. கடந்த 25 ஆண்டுகாலமாக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. இந்நிலையில் மத்திய அரசு சிறு துறைமுகங்களை மேம்பாடு செய்ய முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் சரியான பலனளிக்கவில்லை.
இந்த துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக கடல் சார் வாரியம் 1500 கோடி முதல் 2000 கோடி வரை முதலீடு செய்யவுள்ளது. தனியார் பங்களிப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேவையான நிலம் கையப்படுத்துதல், கப்பல் அணையும் இடத்தில் 15 மீட்டர் ஆழம் வரை ஆழப்படுத்ததுல், கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சேமித்து வைப்பதற்கான குடோன்கள் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வினியோகம் செய்ய பிரத்யேக முனையம் அமைத்தல், இறக்குமதி பொருட்களை வைப்பதற்காக பண்டகசாலை அமைத்தல், தொழில் சார்ந்த உற்பத்தி அலகு, சூரிய ஒளி, காற்றாலை நிறுவுதல், சொகுசு கப்பல் தளம், கடல் சார்ந்த உற்பத்தி அலகு, நிலக்கரி, உரம், சிமென்ட் கன்டெய்னர்கள் வைப்பதற்கான இடம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விரைவில் மேம்பாடு பணிகள் தொடங்கவிருக்கிறது. இதனால் கடலுார் வாழ்மக்களுக்கு 500 பேருக்கு நேரடியாகவும், 1000 பேர்களுகளுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!