பிரதோஷத்தை முன்னிட்டுஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை


பிரதோஷத்தை முன்னிட்டுஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை


ப.வேலுார்:-பிரதோஷத்தை முன்னிட்டு, ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில், 400 ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ப.வேலுாரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பாண்டமங்கலம் புதியகாசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர் கோவில், பில்லுார் விரட்டீஸ்வரர் கோவில், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில், சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement