முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் சிவரஞ்சனி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி, வசந்தபிரியா ஆகியோருக்கும் இடையே முன்விரோத தகராறு உள்ளது.

இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிவரஞ்சனி போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆத்திரமடைந்த ராஜலட்சுமி உறவினரான ராஜேந்திரன் மகன் சச்சின்ராஜ், ஜெய்சங்கரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை திட்டி டைல்ஸ்களை சேதப்படுத்தினார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், சச்சின்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement