தந்தை, மகன் தாக்கு 2 பேர் கைது
நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில் தந்தை, மகனைத் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு, சாலக்கரையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அரவிந்த்,19; இவருக்கும்சி.என்.பாளையம் பூவன்காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
நேற்று மதியம் நடுவீரப்பட்டு டீக் கடைக்கு அரவிந்த், தந்தை கலியமூர்த்தியுடன் சென்றார். அங்கு வந்த பூவன் காலனியை சேர்ந்த சந்தோஷ், வினோத்ராஜ், மாயகிருஷ்ணன், பலாப்பட்டு சஞ்சய் ஆகியோர் சேர்ந்து அரவிந்த், கலியமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில், காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து வினோத்ராஜ்,20; மாயகிருஷ்ணன்,20; ஆகியோரை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
Advertisement
Advertisement