பேராசிரியர் வீட்டில்15 பவுன் நகை திருட்டு
பேராசிரியர் வீட்டில்15 பவுன் நகை திருட்டு
ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கீதாராணி, 37; இவர், நாமக்கல் ராமலிங்கம் அரசு கலை கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் சரஸ்வதி, 65. கடந்த, 21ல் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 15 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த கீதாரணி, ப.வேலுார் போலீசில் புகாரளித்தார். ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, சம்பவம் இடத்தில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement