தியேட்டர் ஊழியர் சாவு போலீசார் விசாரணை

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் முருகன், 43. இவர், அங்குள்ள சினிமா தியேட்டரில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு காட்சி முடிந்த பிறகு, தியேட்டரிலேயே படுத்து துாங்கினார்.

மறுநாள் காலை, தியேட்டர் மேலாளர் மற்றும் ஊழியர்கள், முருகனை எழுப்பியபோது, அவர் சுயநினைவின்றி கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement