சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, செங்குன்றம் சாலை மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய சாலைகளில், தினமும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
ஆட்டோக்களும், சரக்கு வாகனங்களான வேன், மினி வேன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கிராமங்களில் இருந்து, சிலர், சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கு செல்வோர், அதிகளவில் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், இவர்களை கண்டு கொள்ளாததால், இவர்கள் பயணம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால், விபத்து ஏற்பட்டால், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி
-
கோடையில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் ஆலோசனை
-
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை
-
புதுச்சேரி கிட்னி சென்டர் மருத்துவமனையில் ஆயுஷ்மான் திட்டத்தில் இலவச டயாலிஸிஸ்
-
5 பேரை கொன்ற இளைஞர் பற்றி திடுக் தகவல்: போதைக்கு அடிமையாகி கோர தாண்டவமாடிய கொடூரம்
-
குறைத்த செலவில் தரமான சிகிச்சை ராணி மருத்துவமனையின் லட்சியம்