குறைத்த செலவில் தரமான சிகிச்சை ராணி மருத்துவமனையின் லட்சியம்

புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ் சதுக்கம், கலெக்டர் அலுவலகம் அருகே ராணி மருத்துவமனை அமைந்துள்ளது. கடந்த 1995ம் ஆண்டு முதல் மருத்துவ சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கி, மருத்துவ சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. சேவைகளின் மூலம் மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள பல்நோக்கு மருத்துவமனையாகும்.

சிறப்பு பிரிவுகளாக பொது சிறப்பு மருத்துவம், அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, குழந்தை நல மருத்துவம், விபத்து மற்றும் எலும்பு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், மருத்துவ மற்றும் அறுவை புற்றுநோய் மருத்துவம், நரம்பு மருத்துவம், காது,மூக்கு, தொண்டை மருத்துவம் ஆகிய மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகின்றன. 24 மணி நேர மருத்துவ சேவை, ஆய்வகம், மருந்தகம், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஐ.சி.யு., வென்டிலேட்டர், இரு பல்நோக்கு அறுவை சிகிச்சை கூடங்கள், பிரசவ அறை மற்றும் இதர சேவைகளுடன் இயங்கி வருகிறது.

இதுகுறித்து மேலாண் இயக்குனர் ரங்கராஜன் கூறுகையில், தற்போதிய சூழ்நிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள் குறைத்த செலவு மற்றும் தரமான மருத்துவத்தை எதிர்பார்த்து வருகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் வகையில் மருத்துவமனையை முன்னெடுத்துள்ளோம்.

நவீன சூழ்நிலையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

இது, உடலளவிலும், மனதளவிலும் சோர்வை உருவாக்குகிறது. ஆகவே, உடற்பயிற்சி, நடை பழக்கம் மற்றும் பிற சமூக நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்றார்.

Advertisement