புதுச்சேரி கிட்னி சென்டர் மருத்துவமனையில் ஆயுஷ்மான் திட்டத்தில் இலவச டயாலிஸிஸ்
புதுச்சேரி: புதுச்சேரி கிட்னி சென்டர் மருத்துவமனையின் சிறப்பு சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் நாராயணன் கூறியதாவது:
ரத்தத்தை 24 மணி நேரமும் சுத்தம் செய்யும் பணியாளாக சிறுநீரகம் வேலை செய்கிறது. பொட்டாசியம், சோடியம் போன்ற ரசாயன பொருட்களை சம நிலைப்படுத்துகிறது. கூடுதல் அமிலங்களை அகற்றுகிறது. எலும்பு மஜ்ஜைகள், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கும், இயக்க நீரை சுரக்கின்றன.
மனிதர்களின் உடலில் முதுகெலும்பின் இருபக்கங்களிலும் இடுப்பின் பின் பகுதிக்கு சற்று மேல், சிறுநீரகங்கள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் 140 மைல்கள் நீளமுள்ள குழாய்கள் மற்றும் லட்சக்கணக்கான வடிக்கட்டிகள் மூலம் 200 லிட்டருக்கும் அதிகமான ரத்தத்தை சிறுநீரகங்கள் இறைக்கின்றன.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ 20 சதவீத ஆற்றலுடன், வேலை புரிய ஒரே சிறுநீரகம் போதுமானது. ரத்தத்தில் நச்சுக்கழிவு பொருட்கள் சேர ஆரம்பிப்பதால் சோர்வு ஏற்படும். திரவம் சேர்வதால் திசுக்களின் வீக்கம், துரையீரல் ரத்தக்கட்டு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.
சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவோர் தேர்ந்தெடுக்க பல சிகிச்சை முறைகள் உள்ளன. சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறாமல் இருப்பது அடங்கும்.
பெரிடோனியல் டயாலிசிஸ் அடிவயிற்று ரத்த சுத்திகரிப்பு முறையானது குழாய்களையும், பைகளையும் உபயோகித்து ரத்த சுத்திகரிப்பு கரைசலை அடிவயிற்று உட்குழியின் உள்ளேயும், வெளியேயும் இழுக்க ஈர்ப்பு சக்தியை அனுமதிக்கிறது.
தொடர் இயக்க அடிவயிற்று ரத்த சுத்திகரிப்பு முறையில் அடி வயிற்று வடிகுழாயுடன், ஒரு குழாய் மற்றும் நோய் கிருமிகள் துாய்மையான ரத்த சுத்திகரிப்பு கரைசல் கொண்ட ஒரு பை. இந்த பையை தோள்பட்டை மட்டம் அல்லது அதற்கு மேல் உயர்த்துவதால் இக்கரைசல் அடிவயிற்றுக்குள் ஓடுகிறது. இவை கழிவு பொருட்கள் மற்றும் கூடுதல் நீர் ஆகியவை ரத்த சுத்திகரிப்பு கரைசலுக்கு மாற்றப்படுகிறது.
பிறகு பையை தாழ்த்தி அடி வயிற்றினுள் இருந்து வரும் கழிவு பொருட்கள் கொண்ட கரைசலை அதனுள் வடிய செய்கிறது. பார்வை குறைவு உள்ளவர்களுக்கு கருவிகள் உதவியாக உள்ளது.
புதுச்சேரி கிட்னி சென்டர் மருத்துவமனையில் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச டயாலிஸிஸ் செய்யப்படுகிறது, என்றார்.
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!