லட்சுமிநாராயணா மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை

புதுச்சேரி: ஊசுட்டேரி லட்சுமிநாராயணா மருத்துவமனை, குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.

லட்சுமிநாராயணா மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கோ கூறியதாவது:

ஊசுட்டேரியில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய பரிசோதனை கூடங்கள், அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது.

பொது மருத்துவம், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது.

சுக பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் கட்டணம் ஏதும் இன்றி மேற்கொள்கிறோம். இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

மாதம் தோறும் 1000க்கும் மேற்பட்டோருக்கு டைலாசிஸ் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் அவசர டைலாசிஸ் வசதியும் உள்ளது. ஏராளமான வாஸ்குலர் அறுவை சிகிச்சையும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நடக்கிறது. எலும்பு சிகிச்சை பிரிவில் ஆர்த்தோஸ்கோபி முறையிலும், அறுவை சிகிச்சையில் லேப்ரோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், நரம்பு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி நிறுவனர் ஜெகத்ரட்சகன், தலைவர் சந்திப் ஆனந்த் வழிகாட்டுதல்படி குறைந்த கட்டணத்தில் ஆரோக்கியமான நலனை முன்னிலைப்படுத்தி, சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம் என கூறினார்.

Advertisement