பல்லாங்குழி சாலைக்கு விமோசனம்; பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' பணியில், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி எல்லை முழுவதும் ரோடுகள் கண்டமாகி காட்சியளித்தன.

பெரியாண்டிபாளையம் சேனா பள்ளம் துவங்கி சின்னாண்டிபாளையம் பிரிவு வரை, ரோடு மிகவும் சேதமாகியது.

சின்னாண்டிபாளையம் பிரிவில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் அமைத்து, கழிவுநீர் எடுத்து வரும் குழாய்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள், தவணை முறையில் நடந்தன. இதனால், அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மாநகராட்சி பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு மேம்பாட்டு பணி கையில் எடுக்கப்பட்டது. மழைநீரை குளத்துக்குள் அனுப்பும் வகையில், சிறு பாலங்கள் கட்டி, 400 மீட்டர் நீளத்துக்கு ரோடு உயர்த்தப்பட்டது. தற்போது, தார்ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'நீண்ட இடைவெளிக்கு பின், தார்ரோடு அமைப்பது நிம்மதியாக இருக்கிறது,' என்றனர்.

Advertisement