தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னை: தமிழகத்தில் இன்று (பிப்.,26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் (பிப்.,, 24) 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,055 ரூபாய்க்கும், சவரன், 64,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (பிப்.,25) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 64,600 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (பிப்.,26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் ரூ. 8,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேலும்
-
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
-
தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டாலின் சொல்வது பொய்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி; முதல்வருக்கு அண்ணாமலை சவால்
-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி