நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!

2

மாமல்லபுரம்; த.வெ..க., தலைவரும், நடிருகமான விஜய் வீட்டில் மர்ம நபர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



த.வெ.க., வின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக விஜயின் நீலாங்கரை வீடு முன்பு மர்ம நபர் நடமாடி உள்ளார். தமது காதில் செல்போன் வைத்து பேசுவது போல் அங்கும் இங்கும் சென்றுள்ளார்.


பின்னர் யாரும் எதிர்பாராத சில நொடிகளில் தமது கையில் செல்போன் போன்று பாவனை காட்டி வைத்திருந்த குழந்தையின் காலணியை வீட்டின் உள்ளே வீசி இருக்கிறார். இதை கண்டு அங்கிருந்த காவலாளிகள் ஒரு கணம் பதறினர்.


உடனடியாக அந்த மர்ம நபரை தடுத்து, அங்கிருந்து வெளியேற்றினர். காலணியை வீசிய நபர் அங்கேயே சில நிமிடங்கள் சுற்றி திரிந்துள்ளார். அவரது நடவடிக்கைகயை கண்ட அங்குள்ளோர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


மர்ம நபரின் இந்த காலணி வீச்சு சம்பவம் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சில நாட்கள் முன்பாக, நடிகர் விஜய் வீடு மீது முட்டை வீசப்போவதாக ஒரு தகவல் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement