தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு போலீசார் வலை

புதுச்சேரி: மரம்வெட்டும் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், 48; மரவெட்டும் தொழிலாளி.

இவருக்கும், செல்வமணி என்பவருக்கும், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி இலவச புடவை பெறுவதற்கான டோக்கன் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அரியாங்குப்பம் கலைஞர் நகரைச் சேர்ந்த சார்லஸ், அய்யனார், ஆகியோர் வேல்முருகனை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், சார்லஸ், அய்யனார் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement