ரகளை செய்தவர் கைது

காரைக்கால்: குடிபோதையில் ரகளை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், தோமாஸ் அருள் வீதியில், நேற்று முன்தினம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரயில் நிலையம் அருகில் மது அருந்திவிட்டு, பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செய்த, நிரவி கருக்கலாச்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசன், 32; என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement