விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு

திருக்கனுார்: விவசாயியை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு வாய்க்கால் கரை வீதியை சேர்ந்தவர் முருகானந்தம், 49; விவசாயி. இவர், நேற்று மதியம் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று கொண்டிருந்தார். மணலிப்பட்டு முருகன் கோவில் அருகே கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ், 30; அருள், 26; ஆகியோர் முருகானந்தத்தை வழிமறித்து, திட்டி, தாக்கினர்.

காயமடைந்த முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர், அளித்த புகாரின் பேரில், சுரேஷ், அருள் ஆகியோர் மீது திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement