சிறப்பு பள்ளி திறப்பு

புதுச்சேரி: திப்புராயப்பேட்டை செர்த் இந்தியா வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி திறப்பு விழா நடந்தது.

விழாவில், ஈடன் நிறுவன மேலாண் இயக்குநர் சையத் சஜத்அலி கலந்துகொண்டு, மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

இதில், ஈடன் நிறுவன பொது மேலாளர் அந்தோணி ஜெயக்குமார், செர்த் இந்தியா சேர்மன் சிவராம் ஆல்வா, மருத்துவ இயக்குனர் ராமன், உறுப்பினர் உமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement