புற்றுநோய் தின விழிப்புணர்வு

புதுச்சேரி:வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மருத்துவ அதிகாரி பூங்குழலி தலைமை தாங்கி, புற்றுநோயின் வகைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.

சுகாதார ஆய்வாளர் மதிவதனன், உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், ராக் செவிலியர் கல்லுாரி மாணவிகள், பொது மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பிங்க் ரிப்பனை கையில் பிடித்தபடி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர் வளர்மதி, ஆஷா பணியாளர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement