ரத்தத்தில் இன்சுலின் கட்டுக்குள் இருக்கவேண்டும்: டாக்டர் முருகேசன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட்மருத்துவமனை தலைமை சிறுநீரகமருத்துவரும், டாக்டர் புளூ இந்தியா அறக்கட்டளை நிறுவனமானமுருகேசன் கூறியதாவது: :

தொற்றா நோய்களான உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், அதீதஉடல் எடை, மாரடைப்பு, பக்கவாதம், கருப்பையில் நீர்கட்டி, சிறுநீரகசெயலிழப்பு, புற்றுநோய் போன்றவைவராமல் தடுக்க ரத்தத்தில் இன்சுலின் அளவுசீராக இருக்க வேண்டும்.

உலக அளவில் 75 சதவீத இறப்புகள் இன்சுலின் நச்சுத் தன்மையால் ஏற்படுகிறது. எனவே, ரத்த இன்சுலின் அளவு பரிசோதனையை தாமதம் இன்றிசெய்ய வேண்டும்.

இந்தபரிசோதனை குறித்து மருத்துவத் துறையினரிடமும், மக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கஉதவுதல், நோக்கத்தோடுபுதுச்சேரியில் துவங்கப்பட்டஅறக்கட்டளை தான் டாக்டர் புளூ இந்தியா பவுண்டேஷன்.

உலகில் புளூ மண்டலங்களான ஒக்கினவா, இக்காரியா, சார்டினியா,நிக்குவாயா, லோமா லிண்டா ஆகிய இடங்களில் வாழும்மக்களை போன்று, இந்தியர்களின்சராசரி ஆயுட்காலத்தை 10 முதல் 20ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்வதேடாக்டர் புளூ இந்தியா பவுண்டேஷன் நோக்கமாகும்.

இன்சுலின் தாக்கத்தை தொற்றாநோய் ஏற்படுவதற்கு முன் அறிந்து கொண்டு அதன்தீங்கிலிருந்து விடுபட மக்கள் அனைவரும் இன்சுலின்பரிசோதனையை உடனடியாக செய்து கொள்வது அவசியம்.

உடலியல் தேவை, வயது,உடல் உழைப்பு மற்றும்தட்ப வெப்ப நிலைகளைபொறுத்து அனைவருக்கும் ஒரு நாளுக்கு 500 மி.கிராம் குறைவானசோடியமே தேவை. ஆனால்,உலகளாவிய சராசரிஉப்பு உட்கொள்வது நாள் ஒன்றுக்கு 10.8 கிராமமாக இருக்கிறது.சுமார் ஒரு கோடி மக்கள் உப்பினால் ஏற்படும் நச்சுத் தன்மையால் இறக்கின்றனர். எனவே, உணவில்உப்பு சேர்ப்பதை குறைத்துக்கொள்வது அவசியம்.

இன்சுலின் மற்றும் உப்பின் நச்சுத்தன்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில், கட்டாயம்ரத்த இன்சுலின் அளவை சரியாக பராமரித்தல், உணவில் சோடியம்உட்கொள்வதை குறைத்தல் ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும்.இதற்காக,டாக்டர் புளூ இந்தியாஅறக்கட்டளை புதுச்சேரியில் சுமார் ஒருலட்சம் தன்னார்வலர்களுக்கு இன்சுலின் மற்றும் சர்க்கரை அளவுபரிசோதனையை இலவசமாகமூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் செய்து வருகிறது. இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு86087 69286, 94865 35200 எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement