வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், புதுச்சேரி கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவிகள், கல்லுாரி முதல்வர் மொகமத் யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில், காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவுறுத்தலின்படி, கல்லுாரி மாணவிகள் ஆர்த்தி, அபிநேயா, சாருஸ்ரீ, தேவிவைஷ்ணவி, திவ்யதர்ஷினி, தாட்சாயணி, சவுஜன்யா, காயத்ரி, கோபிகா, காயத்ரி, ஹரிணிகுமாரி, காயத்ரி உள்ளிட்டோர், நேற்று காலை துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து, கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர்.
மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அகற்றினர்.
பொதுமக்களுக்கு துாய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும்
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
-
ஆர்ப்பாட்டம்..