எஸ்.பி., அலுவலகத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி

காரைக்கால்: காரைக்கால் எஸ்.பி., அலுவலகத்தில், வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரைக்கால் பெரிய பள்ளிவாசல் மார்க்கெட் பகுதியில், அமீர்தின் என்பவர் கடை வைத்துள்ளார். இவரது கடை வாசல் பகுதியில், போதிய வழி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இது குறித்து, பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் அமீர்தின் முறையிட்டு, கடைக்கு வழி கொடுக்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். நடவடிக்கை இல்லை என்பதால், நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த அமீர்தின், உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரித்தனர். பிறகு, டவுன் போலீசார் அமீர்தினை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Advertisement