பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு மேல், 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர், நந்தி பகவானுக்கு அருகம் புல், வில்வ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் பால், தயிர், தேன், சந்தனம், அருகம்புல் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement