விடுப்பு பேராட்டம் 2700 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த தற்செயல்விடுப்பு போராட்டத்தில் 2700 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழக அளவில் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு கோர்ட் தடை விதித்த நிலையில், நேற்று அறிவித்தது போல தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பை தருவது, கருணை அடிப்படை நியமனத்தில் மீண்டும் 25 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்துவது உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிட நலத்துறை, வேளாண்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறை அலுவலர்கள்,10 தாலுகா அலுவலகங்கள், 11 ஒன்றிய அலுவலகங்களில் இருந்து என 2700 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

மாவட்ட தலைவர் அந்தோணிராஜன், செயலாளர் வைரவன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இன்னொரு பக்கம்ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தால்பள்ளிகள் வெறிச்சோடின.

Advertisement