எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

4

மதுரை: '18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும்' என தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.


மதுரையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


தேர்தல் பணி குறித்து மதுரையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. தேர்தல் பணியை சிறப்பாக செய்கின்றனர். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி அளிக்கும் போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சா பட்நாயக், மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement