ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

1


ஓசூர்: ஓசூர் அருகே பாகலுாரில், 715 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டி துறைமுகங்கள் வழியாக சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய நபர்களை போலீசாரும், வனத்துறையினரும் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். எனினும் கடத்தல் முற்றிலும் நின்றபாடில்லை.
இந்நிலையில், ஓசூர் அருகே பாகலுாரில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அவற்றை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய். செம்மரங்களை கடத்தி வந்து பதுக்கி வைத்தது தொடர்பாக, ராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement