அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு

10


சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பில், தமிழகம் 8 லோக்சபா தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.,26) அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இது குறித்து நிருபர்களுக்கு சீமான் அளித்த பேட்டி:

பல போராட்டங்களை தனித்து தான் செய்து இருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுது தான் பேசுகிறார்கள். இந்த கருத்தை 2003ம் ஆண்டிலேயே அறிக்கை விட்டு, இந்த கருத்திற்கு எதிராக பேசி இருக்கிறேன்.



கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம். அதனால் இதையே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement