கிருஷ்ணன்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் ரோட்டை கடக்க மக்கள் சிரமத்துக்கு ஆளாகி விபத்து அபாயம் காணப்படுகிறது.

மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலில் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் பயணித்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள், கார்கள் நிறுத்தப்படுகிறது.

வத்திராயிருப்பு ரோடு வளைவு பகுதியில் இருந்து பெட்ரோல் பங்க் வரையில் ஆக்கிரமிப்புகளும், ஆட்டோக்களும் இருப்பதால் எதிரும் புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர்.

மேலும் வலையப்பட்டி ரோடு சந்திப்பில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் போதிய உயரமில்லாமல் உள்ளது. கிருஷ்ணன் கோவில் பஜார் வீதியில் அதிகளவு மக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலையில் அதி வேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

ரோட்டை கடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்ய கிருஷ்ணன்கோவில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement