வாலிபர் மீது போக்சோ

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 21.கரூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இருவரும் சாத்துார் அருகே ஒரு கிராமத்தில் தனி வீடு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்த போது அவருக்கு வயது 16 என தெரியவந்தது. சாத்துார் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement