'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!

மாமல்லபுரம்: கெட் அவுட் இயக்கத்தை நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்.
@1br@நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.


















காலை 8.45 மணியளவில் தமது நீலாங்கரை வீட்டில் இருந்து நடிகர் விஜய் காரில் புறப்பட்டார். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த தொண்டர்கள் விஜய்யை கண்டு உற்சாக குரல் எழுப்பி கைகளை அசைத்தனர்.
சுமார் 9.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வளாகத்திற்குள் ரசிகர்கள் கரவொலிகளுக்கு இடையே நுழைந்தார். காரில் இருந்து இறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விழாவானது சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மேடை ஏறிய விஜய்க்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விஜய்யுடன் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் கிருஷ்ணா, ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் மேடை ஏறினர்.
மேடையில் விஜய்யை கண்ட தொண்டர்கள் "டிவிகே டிவிகே" என்று கட்சியின் பெயரை உச்சரித்தபடியே குரல் எழுப்ப, அவர்களை நோக்கி கைகளை அசைத்து விஜய் உற்சாகப்படுத்தினார். புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திணிப்புடன் சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்ப்போம் என்ற வாசகங்களுடன் கூடிய getout என்ற இயக்கத்தை முதல் கையெழுத்தை இட்டு விஜய் தொடங்கி வைத்தார்.
விழாவின் முதல் நிகழ்வாக, நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலை நிகழ்ச்சி நடந்தது. பிறகு விஜய்யின் ஓராண்டு அரசியலை விளக்கும் வகையிலான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
முன்னதாக, விழாவில் வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு கெட் அவுட் என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.
விழுப்புரம் மாநாட்டுக்கு பின்னர் விஜய் கலந்து கொண்ட கூட்டம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் விழா அரங்கில் காணப்பட்டனர். விஜய் ரசிகர்கள்,தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. சென்னை-புதுச்சேரி சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபடி சென்றன.
வாசகர் கருத்து (33)
K.Mani - Riffa,இந்தியா
26 பிப்,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
K.Mani - Riffa,இந்தியா
26 பிப்,2025 - 14:37 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 பிப்,2025 - 14:13 Report Abuse

0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
26 பிப்,2025 - 13:42 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
26 பிப்,2025 - 13:34 Report Abuse

0
0
Reply
GOPAL MURALI - chidambaram,இந்தியா
26 பிப்,2025 - 13:27 Report Abuse

0
0
Reply
nb - ,
26 பிப்,2025 - 13:23 Report Abuse

0
0
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
26 பிப்,2025 - 13:45Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 பிப்,2025 - 12:42 Report Abuse

0
0
Reply
R.Gunasekharan - மார்த்தாண்டம்,இந்தியா
26 பிப்,2025 - 12:33 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 பிப்,2025 - 12:23 Report Abuse

0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
அரசு பள்ளி கழிவறையில் 9 ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்
-
தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டாலின் சொல்வது பொய்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி; முதல்வருக்கு அண்ணாமலை சவால்
-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்; சீமான் அறிவிப்பு
-
பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
Advertisement
Advertisement