ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை

25


சென்னை: 'பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாநில போலீஸ் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.



பள்ளிகளில் ஜாதி உணர்வுகளை ஒழித்து மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில போலீஸ் கமிஷன் தங்களது கருத்தை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜாதி பாகுபாடு ஏதும் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இது போன்ற பாகுபாடுகளுக்கு ஆளாகக்கூடிய பள்ளிகள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும்.



எந்தவொரு குறிப்பிட்ட குடும்ப ஜாதி ஆசிரியர் குழுவால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு பணியிடை மாற்றம் செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.


தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவதில் முக்கிய பொறுப்பு உள்ளது. பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு மாநில போலீஸ் கமிஷன் பரிந்துரை வழங்கி உள்ளது.


பள்ளி வளாகங்களில் பல இடங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் வந்துள்ளன.

Advertisement