இழப்பீடு தராத விவகாரம்: வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஜப்தி

ராமநாதபுரம்: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு தராததால், ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அகமது ஜலால். இவரது ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலத்தை 1997 ஏப்ரல் 3ம் தேதி ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையகப்படுத்தப்பட்டு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடாக சென்ட் 5000 ரூபாய் வீதம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் 2007 அக்டோபர் 31ல் முதல் தவணையாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 844 ரூபாய் வழங்கினர். இரண்டாவது தவணையாக 2009இல் மே 18 இல் 5 லட்சத்து 87 ஆயிரத்து 144 ரூபாய் வழங்கப்பட்டது.
மீதமுள்ள ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 798 ரூபாய்க்கு பணம் வழங்காததால் அகமது ஜலால், ராமநாதபுரம் சப் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சப் கோர்ட் நீதிபதி அகிலா தேவி ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொறியாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ராமநாதபுரம் நீதிமன்ற முதுநிலை ஆமினா ஆனந்தராஜ் தலைமையிலான ஊழியர்கள் ராமநாதபுரம் வீட்டு வசதி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்தனர்.
மேலும்
-
ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா ; உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
-
மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு: 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்; உ.பி., முதல்வர் தகவல்
-
விண்ணதிர முழங்கிய 'ஓம் நமசிவாய'; ஈஷாவில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்
-
இந்தியா உடனான உறவு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: ஆஸி., பிரதமர் உறுதி
-
என்.ஐ.டி. பேராசிரியருக்கு பதவி உயர்வு: கேரள அரசியலில் சர்ச்சை!