பிரசிடென்சி எலைட் பள்ளியில் புராஜக்ட் டே விழா

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேனிலைப் பள்ளி எலைட்டில் புராஜக்ட் டே விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லுாரி பேராசிரியர் மதிவாணன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு மையம் பேராசிரியர் குமரேசன் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளியின் தாளாளர் கிறிஸ்துராஜ் வருங்கால விஞ்ஞானிகள் பற்றியும், புதிய தொழில்நுட்பம் குறித்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, செயலாளர் கவுதம், துணை முதல்வர் ஜோசப் ஜான்பால் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு அறிவியல், கலை மற்றும் மொழி சார்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்பு திறனைக்கண்டுகளித்தனர்.

Advertisement