பாகூர் சாலையில் சாய்ந்துள்ள மின் கம்பங்களால் அச்சம்

பாகூர்: பாகூர்-கன்னியக்கோவில் சாலையில், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.

பாகூர்-கன்னியக்கோவில் சாலையில், ஏராளமானோர் பைக், கார், பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள சில மின் கம்பங்கள் சாய்ந்து வருகிறது.

இதனால்,பல இடங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் மீது, மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்குள்ள மரவாடி அருகே மின் கம்பத்தின் நடு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

விபத்து நேரிடும் முன்பாக,மின் துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement