வாடகை வீட்டில் தகராறு 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி வாழைகுளம் பகுதியை சேர்ந்தவர் வினிதா, 32; இவர், குடும்பத்துடன் சுகுமார் என்பவரது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 24ம் தேதி, வீட்டின் உரிமையாளரான சுகுமாரின் தாயார், வினிதாவை வீட்டை காலி செய்து செல்லும்படி கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.இதனால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வந்த சுகுமார்,அவரது மனைவி சபா, மகள் சமாவதி ஆகியோர், தகராறு குறித்து வினிதாவிடம் தட்டிகேட்டபோது, இரு குடும்ப மோதலாக மாறியது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். வினிதா அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசில்,சுகுமார், சபா, சமாவதி மீதும், சமாவதி அளித்த புகாரின் பேரில், வினிதா மீதும், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement