ரத்தக்கசிவு நோய்களில் நோய் எதிர்ப்பு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், ரத்தக்கசிவு நோய்களில் நோய் எதிர்ப்பு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், இலவசமாக, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில், ரத்தக்கசிவு நோய்களில் நோய் எதிர்ப்பு சிகிச்சையின், எ.பி.சி. என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் வரவேற்றார். சென்னை காவேரி மருத்துவமனை ரத்தக்கசிவு மற்றும் ரத்த புற்றுநோயியல் இணை ஆலோசகர் அர்ஷத் ராஜா, ரத்தக்கசிவு நோய்களை பற்றி விளக்கம் அளித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில், மருத்துவ உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, சிறப்பு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement