போலீஸ் துறையில் 7 நாய்குட்டிகள்

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் துறையில் இணைந்த 7 நாய் குட்டிகளை உயரதிகாரிகள் கொஞ்சி குலாவினர்.
புதுச்சேரி போலீஸ் துறையில் துப்பறிவு மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகின்றது. இப்பிரிவில் புதுச்சேரியில் 9, காரைக்காலில் 2 என மொத்தம் 11 மோப்ப நாய்கள் இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரியில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் டோனி, ராம் என இரண்டு மோப்பநாய்களும், குற்ற புலனாய்வில் ரோஜர் என்ற மோப்ப நாயும், போதை பொருட்கள் கண்டறிய பைரவா என நான்கு மோப்ப நாய்கள் மட்டுமே உள்ளன.
இதேபோன்று காரைக்காலில் வெடி குண்டுகளை கண்டறிய ஜாக் என்ற மோப்ப நாய் மட்டுமே பணியில் உள்ளன. எனவே காவல் துறைக்கு லேபர்டாக் இனத்தை 5 நாய் குட்டிகளும், டாபர்மேன் இனத்தை சேர்ந்த 2 நாய்குட்டிகள் என ஏழு புதிதாக நாய்குட்டிகள் வாங்கி, பணியில் இணைக்கப்பட்டுள்ளன.
லேபர்டாக் நாய் குட்டி ஒன்று 26,500 ரூபாய் வீதம் ஐந்து நாய் குட்டிகள் 1,32,500 ரூபாய்க்கும், ஒரு டாபர்மேன் நாய்குட்டி 29 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு குட்டிகள் 58 ஆயிரம் ரூபாய்க்கு கோயம்புத்துாரில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த நாய்குட்டிகளை டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமையிலான போலீஸ் உயரதிகாரிகள் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இது குறித்து மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரியில் நடக்கும் அனைத்து குற்ற வழக்குகளிலும் மோப்பநாய்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அண்மையில் ஐந்து மோப்பநாய்கள் பணி ஓய்வு பெற்றன. ஒரு மோப்ப நாய் இறந்தது. எனவே போலீஸ் துறைக்கு புதிதாக மோப்பநாய் குட்டிகள் தற்போது டெண்டர் விட்டு வாங்கப்பட்டுள்ளன. இவை மூன்று மாத குட்டிகள்.
இவை பயிற்சிக்கு பின், புதுச்சேரி வெடிகுண்டு பிரிவில்-3, குற்ற புலனாய்வு-1, போதை பொருள் தடுப்பு பிரிவு-1 என இணைக்கப்படும்.
காரைக்காலை குற்ற புலனாய்வு-1, போதை பொருள் தடுப்பு-1 என சேர்க்கப்படும் என்றனர்.
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை