காமராஜர் அரசு கல்லுாரியில் வரலாற்று தடங்கள் ஆய்வு கருத்தரங்கம்

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலை கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில் 'புதுச்சேரியின் வரலாற்று தடங்கள்' என்ற ஆய்வு கருத்தரங்கம் நடந்தது.

புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, மாணவர்களின் பாட திட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இளங்கலை பயிலும்போதே ஆய்வை மேற்கொள்ளும் வகையில், பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு உதவும் வகையில், இக்கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் 'புதுச் சேரியின் வரலாற்றுத் தடங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். பேராசிரியர் புகழேந்தி வரவேற்றார். பேராசிரியர் அன்புசெல்வன் நோக்கவுரையாற்றினார்.

கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனுார் வெங்கடேசன், புதுச்சேரி கோவில்களில் காணப்படும் வரலாற்று அடையாளங்கள் குறித்தும், குறிப்பாக வில்லியனுார், திருபுவனை, திருவாண்டார்கோயில், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களையும், அதில் உள்ள கல்வெட்டுகள் கூறும் செய்திகளையும் விளக்கினார்.

பேராசிரியர் இளங்கோ, ஆய்வுகள் குறித்தும், ஆய்வு கட்டுரைகள் வடிவமைத்தல் குறித்தும் விளக்கினார். பேராசிரியர் ரஞ்சன் நன்றி கூறினார்.

Advertisement