பாரதிதாசன் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு கல்லுாரி தமிழ்த் துறையின் கணித்தமிழ்பேரவையின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

தமிழ்நாடு அரசின் தமிழ் இணைய கல்வி கழக சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ்த் துறையில் கணித் தமிழ் பேரவை அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் கணினி தமிழ் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக தமிழ்த் துறை சார்பில் நேற்று சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். கனடா வான்கூவர் கொலம்பியா கல்லுாரி முன்னாள் கணிதத் துறை தலைவர் சம்பந்தம் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினார். கணினி தமிழ் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழித் துறை தலைவர் சேதுபதி வாழ்த்தி பேசினார். பேராசிரியர் வஜ்ரவேலு நன்றி கூறினார்.

Advertisement