அரசு கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'உயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்கால சவால்கள்' குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் சிவக்குமார், தாவரவியல் கவுரவ விரிவுரையாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கவுர விரிவுரையாளர் சுஹாஷினி வரவேற்றார். இதில், பெங்களூரு கிறிஸ்ட் பல்கலை., உயிர் அறிவியல் துறை உதவி பேராசிரியர் பாரி, பங்கேற்று உயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்கால சவால்களை மாணவர்கள் எவ்வாறு எதிர்நோக்குவது குறித்து பேசினார்.

பேராசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.

Advertisement