குறித்த காலத்தில் வரி செலுத்த கமிஷனர் உத்தரவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து ம.ம.க. மற்றும் வர்த்தக சங்கங்கள் இணைந்து இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கமிஷனர் கிருஷ்ணராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

தமிழகம் முழுதும் 6 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் வரி செலுத்தினால் அடிப்படை மதிப்பில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.100 சதவீதம் வரி வசூல் செய்தால் மட்டுமே நிதிக்குழு மான்யம் கிடைக்கும்.இதுவரை 75 சதவீதம் மட்டுமே வரி வசூல் நடந்துள்ளது.

நிதிக்குழு மான்யத்தை பெற 100 சதவீத வரி வசூல் செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் மற்ற நகராட்சிகளை விட நெல்லிக்குப்பம் நகராட்சியிலேயே உரிம கட்டணம் குறைவாக உள்ளது. நிதிக்குழு மான்யத்தை பெற்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அனைவரும் குறித்த காலத்தில் வரியை செலுத்த கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement