வேன் கவிழ்ந்து 22 பேர் காயம்

மந்தாரக்குப்பம: மந்தாரக்குப்பம் அருகே வேன் கவிழ்ந்து 22 பேர் படுகாயமடைந்தனர்.

நெய்வேலி அடுத்த அகிலாண்டகங்காபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் டாடா சிட்டி ரைடர் வேனில் சதுரகிரி மலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்து விட்டு நெய்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 7:30 மணியளவில் ஊமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வேன் சென்றபோது திடீரென பைக் ஒன்று சாலையை கடக்க முயன்றது.

பைக் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் பால்ராஜ், பிரேக் அடித்தார். அதில், வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணம் செய்த 14 பெண்கள், 8 ஆண்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த ஊமங்கலம்போலீசார் அனைவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement