வேப்பூரில் போலீசாருடன் வாக்குவாதம் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 2 பேர் கைது

கடலுார்: வேப்பூரில் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., நிர்வாகி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர் மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 35 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்போது, ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, பரமக்குடி அ.தி.மு.க., மத்திய இளைஞரணி ஒன்றிய செயலாளர் நாகராஜன், 32; காட்டு பரமக்குடி கோபாலமணிகண்டன், 30; ஆகியோர் தாங்கள் வந்த காரை நடுரோட்டில் நிறுத்தி, போலீசாரை திட்டி, போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.

இதையடுத்து, நாகராஜன், கோபாலமணிகண்டன் மீது வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement