மகன் திட்டியதால் தந்தை தற்கொலை 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மகன் திட்டியதால், மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவரது மகன் அசோக்குமார், 33. நேற்று முன்தினம் சுப்ரமணியனை கூலி வேலைக்கு செல்லுமாறு கூறி, அசோக்குமார் திட்டியுள்ளார்.

மனமுடைந்த சுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement