பெண்ணை தாக்கி நகை பறிப்பு விருத்தாசலத்தில் துணிகரம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பட்டபகலில், நடந்து சென்ற பெண்ணை தாக்கி, அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விஜயன் மனைவி தாரணி, 27. இவரது மகன் அய்யனார் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று பகல் 12:30 மணியளவில் தனது மகனுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, அவரை பைக்கில் பின்தொடர்ந்த ெஹல்மெட் அணிந்த மர்ம நபர்கள், மேட்டுத்தெரு அருகே அவர் மீது பைக்கை மோதினர். நிலைதடுமாறி தாரணி கீழே விழுந்துள்ளார். அப்பகுதியில் யாரும் இல்லாததால், தாரணியை தாக்கி, அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
சாலையில் மயங்கி கிடந்த தாரணியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகலவறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பட்டபகலில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி, நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை