மகா சிவராத்திரி வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பெரிய நாயகர், பஞ்சலிங்கம், அண்ணாமலையார் சன்னதிகளில் நான்கு கால பூஜைகளும் சிவனடியார்களின் கயிலாய வாத்தியங்கள் முழங்கிட நடந்தது.

கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலில் சொக்கநாதர் சுவாமி, தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மங்கலம்பேட்டை மரகதாம்பிகை உடனுறை ஆத்துார்புரீஸ்வரர், ராஜேந்திரபட்டிணம் நீலகண்டேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் சிவபுராணம், திருவாசகம் பாடியபடி விடிய விடிய கண் விழித்து வேண்டுதலை நிறைவற்றினர்.

Advertisement