சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரேணுகா கண்ணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஸ்வநாதன் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.

விழாவில் மாணவர்களுக்கு நாறு சதவீத வருகைக்கான விருது, கல்விசார் சிறப்பு விருதுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த செயல்திறனுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement