விஜயமாநகரத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் ஊராட்சி, புதுஇளவரசம்பட்டு கிராமத்தில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஜெ., பேரவை துணை செயலர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

கிளை செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில், மாநில துணை செயலர் அருள் அழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement