பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

20


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில், குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அக்கோரா கட்டக் மாவட்டத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் ஹக்கானியா பள்ளிவாசலில் தொழுகையின் போது வெடிகுண்டு வெடித்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தக் அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.




பிரதமர் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

இது கோழைத்தனமான மற்றும் கொடூரமான பயங்கரவாத செயல். நாட்டிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் முற்றிலுமாக ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement