இந்தியா ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதம்: மத்திய அரசு

புதுடில்லி: கடந்த 2024 -25 ல் 3வது காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. இது இரண்டாவது காலாண்டை விட அதிகம் ஆகும்.
இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறி்க்கையில் கூறியுள்ளதாவது: 2024 - 25 நிதியாண்டின் 3வது காலாண்டில்( 2024 அக்.,- டிச.,) இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதம் ஆக இருந்தது. உற்பத்தி மற்றும் சுரங்கத்துறைகளில் எதிர்பார்த்த அளவு செயல்பாடு இல்லாத காரணத்தினால் ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், 2024 -25 ம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில்( ஜூலை - செப்.,) ஜி.டி.பி., வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.
நடப்பு காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



