விராத் கோலி '300': ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்

துபாய்: இந்தியாவின் கோலி, தனது 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார்.
துபாயில், நாளை நடக்கவுள்ள ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றலாம்.
இது, ஒருநாள் அரங்கில் இந்தியாவின் விராத் கோலி களமிறங்கும் 300வது போடடி. பாகிஸ்தானுக்கு எதிராக சதம் (100*) விளாசிய இவர், இன்னும் 85 ரன் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக 3000 ரன் எட்டிய 5வது வீரராகலாம். இதுவரை 55 போட்டியில் 2915 ரன் (9 சதம்) குவித்துள்ளார் கோலி. இதில் 14 டெஸ்டில் 959, 31 ஒருநாள் போட்டியில் 1645, 10 'டி-20'ல் 311 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (3345 ரன், 66 போட்டி), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (3145 ரன், 69 போட்டி), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (3071 ரன், 67 போட்டி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (3068 ரன், 50 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.
சச்சினை முந்தலாம்: கோலி, இன்னும் 106 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டி அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன் குவித்து இந்திய வீரராகலாம். இவர், இதுவரை 31 போட்டியில், 6 சதம், 9 அரைசதம் உட்பட 1645 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (1750 ரன், 42 போட்டி, 5 சதம், 8 அரைசதம்) உள்ளார்.
ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்கள் வரிசையில் கோலி 3வது இடத்தில் (1645 ரன், 31 போட்டி) உள்ளார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1971 ரன், 51 போட்டி), இந்தியாவின் சச்சின் (1750 ரன், 42 போட்டி) உள்ளனர்.
ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடும் 7வது இந்திய வீரராகிறார் விராத் கோலி. இதுவரை 299 போட்டியில், 51 சதம் உட்பட 14,085 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), தோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.
பயிற்சியில் சுப்மன் கில்
நேற்று முன்தினம் துபாயில் நடந்த இந்திய அணியினருக்கான பயிற்சியில் துணை கேப்டன் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவர், ஓட்டல் அறையிலேயே தங்கிவிட்டார். இதனால் இவர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று, சுப்மன் கில் இரண்டு மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இவருக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு வேகப்பந்துவீச்சாளர், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக இவர் விளையாடுவது உறுதியானது.
மேலும்
-
எருது விடும் விழா 12 பேர் படுகாயம்
-
தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு
-
அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு தாலாட்டு
-
'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்பு அரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'
-
மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவர் கைது
-
அஞ்சல்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி